
கொரோன தொற்றால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் திரையரங்குகள் முழுவதும் திறக்க அனுமதி ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள். தற்போது தயாரிக்கப்பட்ட படங்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் தமிழ்த் திரையுலகிலிருந்து முதன்முதலில் ஓடிடி தளத்தில் இயக்குனர் ஜே.ஜே.ப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் வெளியானது.
இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பெண்குயின்’ படம் வெளியானது. மற்றும் திரைத்துறையில் பின்னணி நடனக் கலைஞர்களின்

அன்றாட வாழ்க்கையில் நிகழும் பல உண்மைக் கதைகளை மையப்படுத்தி, காயத்ரி ரகுராம் இயக்கி தயாரித்த படம் ஆன “யாதுமாகி நின்றாய்”. இப்படமானது ஜூன் 19 தேதி அன்று ஜீ5 தளத்தில் வெளியிட்டு உள்ளார். பின்பு ஜீ5 தளத்தில் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள ‘டேனி’ படமும் ஜீ 5 ஓடிடி தளத்தில் தான் வெளியாகவுள்ளது. இருப்பினும்

இப்படத்திற்கான வெளியீட்டுத் தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில் தற்போது ஓடிடி தளத்தில் அடுத்து திரைக்கு வர காத்துக் கொண்டியிருக்கும் படம் காக்டெய்ல் ஆகும். இப்படத்தின் இயக்குனர் முருகன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில், வரும் ஜூலை 10-ம் தேதி அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகும் என அதிகாரப் பூர்விகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் தயாரிப்பாளர் பி.ஜி.முத்தையா ஆகும். மேலும் இப்படத்தில் ரமேஷ், மிதுன், பாலா, குரேஷி, சாயாஜி ஷிண்டே, ராஷ்மி கோபிநாத், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மற்றும் ஜீ5 ஓடிடி தளத்தில் நடிகர் யோகி பாபு படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது என குறிப்பிடத்தக்கது.