Type Here to Get Search Results !

இந்தியாவுடன் யாரும் மோத முடியாது. நமது எல்லைகள் காக்கப்படும் பிரதமர் மோடி



இந்தியாவுடன் யாரும் மோத முடியாது. நமது எல்லைகள் காக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது : நமது எல்லை மற்றும் இறையாண்மையை காப்பதில் இந்தியா கொண்டுள்ள உறுதித்தன்மையை உலகம் பார்த்துள்ளது. லடாக்கில், நமது பகுதியில் அத்துமீறலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. லடாக்கில் வீரமரணம் அடைந்த நமது தைரியமிக்க வீரர்களுக்கு தேசம் தலை வணங்குகிறது. அவர்களின் தியாகம் என்றும் நினைவில் கொள்ளப்படும்.

தங்களது மகன்களை இழந்த குடும்பத்தினர், தங்களது குழந்தைகளை பாதுகாப்பு படையினருக்கு அனுப்ப வேண்டும் என நினைக்கின்றனர். இந்தியாவுடன் யாரும் மோத முடியாது. நமது எல்லைகள் காக்கப்படும். லடாக் எல்லையில் சீன அத்துமீறலுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது. நட்பை பெறுவது எப்படி என்று இந்தியாவுக்கு தெரியும் . கண்ணுக்கு கண் என தெரியவந்தால் பதிலடி கொடுக்கவும் தெரியும். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை நினைத்து ஒட்டு மொத்த தேசமும் பெருமை கொள்கிறது.

தனக்கு வரும் பிரச்னைகளை எப்போதும் வாய்ப்பாகவே நமது நாடு மாற்றி வருகிறது சுயசார்பை நோக்கி இந்தியா முன்னேறுகிறது மக்கள் ஒத்துழைப்பின்றி எந்த திட்டமும் வெற்றி பெறாது. லடாக்கில் அத்துமீறலுக்கு பின் உள்நாட்டு பொருளையே வாங்க வேண்டும் என நாடு முழுவதும் சிலர் உறுதியேற்றுள்ளனர் பாதுகாப்பு துறையிலும் இந்தியா சுயசார்பு அடைய வேண்டும் என்பது தமிழகத்தை சேர்ந்த மோகன் ராமமூர்த்தி என்பவரது விருப்பம்.

கொரோனா பரவல் எப்போது முடியும் என்பது தான் பலரும் பேசும் விஷயமாக உள்ளது. 2020ம் ஆண்டு எப்போது நிறைவு பெறும் என மக்கள் நினைக்கின்றனர். இந்த ஆண்டு பல சவால்கள் நிறைந்த ஆண்டாக உள்ளதாக நினைக்கின்றனர். பல சவால்கள் இருந்தாலும், அதிலிருந்து நாம் மீண்டு வந்துள்ளதற்கான வரலாறு நம்மிடம் உள்ளது. சவால்களுக்கு பிறகு நாம் வலிமையானவர்களாக மாறுகிறோம். ஆண்டின் முதல் 6 மாதம் கடினமாக இருந்ததால், எஞ்சிய 6 மாதமும் அப்படியே இருக்கும் எனக்கூற முடியாது. ஊரடங்கு முடிந்து சகஜ நிலை திரும்ப நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கும் நிலையில் மிக கவனமுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom