Type Here to Get Search Results !

நாசா தற்போது சூரியனின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது

We've Never Seen the Sun's Top or Bottom. Solar Orbiter Will ...

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தற்போது சூரியனின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சூரியனின் போக்கை நாசாவின் செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது.

இந்த 10 ஆண்டுகளில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை என்ற விகிதத்தில் இந்த செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. இவ்வாறாக நான்கரை கோடி புகைப்படங்கள் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் தொகுக்கப்பட்டு தற்போது ஓர் ஆவணப்படம் போல நாசாவால் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் புகைப்படத் தொகுப்பு ஓர் வீடியோ போல காட்சியளிக்கிறது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2010ம் ஆண்டுமுதல் 2020ம் ஆண்டுவரை எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள், சூரியனின் பல ஒளி மாற்றங்கள் மற்றும் பரிணாமங்களைக் காட்டுகிறது.

நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள் பல ஆண்டுகளாக வெள்ளி கிரகம் மற்றும் சூரியன் ஆகியவற்றை மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறது.

latest tamil news

11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனின் காந்தவிசை மாறும். அப்போது சூரியனின் வட மற்றும் தென் துருவங்கள் எதிரெதிராக மாறும். இந்த புகைப்படங்கள் தற்போது மிக அதிக ரெசல்யூஷனில் தெளிவாக எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

இந்தப் புகைப்படத் தொகுப்பு 61 நிமிட வீடியோவாக ஓடுகிறது. இதில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் அனிமேஷன் போல தத்ரூபமாக உள்ளன. இது பார்வையாளர்களை வியக்கவைத்துள்ளது. இந்தப் புகைப்படங்கள் 17.1 நானோமீட்டர் அலைநீளத்தில் எடுக்கப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொழில்நுட்ப கோளாறால் சில படங்கள் பதிவாகாமல் முழுவதுமாக கருப்படித்துக் காட்சி அளிக்கிறது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom