Type Here to Get Search Results !

ஜம்மு - காஷ்மீரில் காஸ் இருப்பு வைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு குழப்பத்தில் மக்கள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் ...

ஜம்மு - காஷ்மீரில் இரண்டு மாதங்களுக்கு தேவையான சமையல் 'காஸ்' சிலிண்டர்களை இருப்பு வைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து வருகிறது. லடாக்கில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பல ஆயுதங்கள் தளவாடங்களும் ஏவுகணைகளும் குவிக்கப்பட்டுள்ளன. இது இரு நாட்டுக்கும் இடையே போர் ஏற்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான 'காஸ்' சிலிண்டர்களை இருப்பு வைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் முர்முவின் ஆலோசகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கிடையே ஆயுதம் தாங்கிய துணை ராணுவப் படையினர் தங்குவதற்காக சில கல்வி நிறுவனங்களை தயார் நிலையில் வைக்கும்படி கர்தர்பால் மாவட்ட நிர்வாகத்துக்கு மாவட்ட மூத்த போலீஸ் கண்காணிப்பாளர் தகவல் அனுப்பியுள்ளார்.

'குளிர்காலத்தில் பனிச் சரிவு ஏற்படும். அதனால் சிலிண்டர்களை இருப்பு வைக்க உத்தரவிடுவது வழக்கம். தற்போது எதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உண்மை நிலவரம் குறித்து மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும்' என தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom