Type Here to Get Search Results !

பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு 8.3 சதவீதம் சரிந்தது நஷ்டத்தில் பேஸ்புக்

பேஸ்புக் குறித்து மார்க் ...

பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் தற்போது 7.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள விளம்பரங்கள் பறி போய் உள்ளதால் லாபத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். கடந்த வெள்ளியன்று பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு 8.3 சதவீதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு பேஸ்புக் பங்குகள் இவ்வாறு சரிந்துள்ளன. பிளூம்பர்க் இதழின் உலக பணக்காரர் பட்டியலில் மார்க் சக்கர்பர்க் பின்னடைவை சந்தித்துள்ளார். தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு குறைந்து 82.3 பில்லியன் டாலராக உள்ளது. இதனால் லூயிஸ் பூட்டான் பாஸ் பெர்னார்டு என்பவர் மார்க் சக்கர்பெர்க்-ஐ பணக்காரர் பட்டியலில் நான்காம் இடத்திற்குத் தள்ளி, மூன்றாம் இடத்துக்கு முன்னேறினார். ஜெப் பெசோஸ் மற்றும் பில் கேட்சுக்கு அடுத்து உலக பணக்காரர் பட்டியலில் பெரும் பணக்காரராகத் திகழ்ந்த மார்க் தற்போது 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோககோலா நிறுவனம் கொரோனா ஊரடங்கு காரணமாக தனது சமூக வலைத்தள விளம்பரங்களை வரும் 30 நாட்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதேபோல வெரிசான் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பேஸ்புக்கில் விளம்பரம் தருவதை நிறுத்திவிட்டது பேஸ்புக்கில் பல உண்மைக்கு மாறான செய்திகள் உலவுவதால் அந்த சமூக வலைத்தளத்தில் தாங்கள் விளம்பரம் செய்ய விரும்பவில்லை என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து மார்க் வெளியிட்ட அறிக்கையில் பேஸ்புக்கில் போலி செய்திகள், மிரட்டல்கள், தவறான தகவல்கள் ஆகியவை களையப்படும் என உறுதியளித்தார்.

மேலும் பேக் ஐடிக்கள் மூலம் சமுதாயத்துக்கு சீர்கேடு விளைவிக்கும் பதிவுகளை இடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். பெரிய அரசியல் தலைவர்களுக்கும் பேஸ்புக் வரம்புக்கு உட்பட்டுதான் பதிவுகளை இடவேண்டும், அவர்களுக்கு எந்தவித சலுகையும் கிடையாது என அவர் கூறியுள்ளார். முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருப்பின மக்களுக்கு எதிராக இட்ட பதிவை நீக்காதது பெரும் சர்ச்சைக்குள்ளாகி மார்க்குக்கு எதிராக பேஸ்புக் ஊழியர்களே போராட்டத்தில் இறங்கினர். இதனைத்தொடர்ந்து மார்க் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom