Type Here to Get Search Results !

வந்தேபாரத் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் 170 விமானங்களை இயக்க மத்திய அரசு முடிவு

UAE : அடுத்த கட்டமாக தமிழகத்திற்கு ...

உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவி மக்களை அச்சமடையச் செய்துள்ளது. கொரோனா மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நாடுகளில் பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலிருந்து கடந்த மார்ச் கடைசி வாரம் முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பல நாடுகளில் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்தியர்களை மீட்கும் பொருட்டு மத்திய அரசு வந்தேபாரத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் படி கடந்த மாதம் 7 ம் தேதி முதல் ஒவ்வொரு கட்டமாக ஒவ்வொரு கட்டமாக இந்திய விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் நான்காம் கட்டமாக வரும் 3ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பல்வேறு நாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை மீட்க 170 விமானங்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி அமெரிக்கா, கனடா, பிரிட்டன், இலங்கை, பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா, தாய்லாந்து, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 17 நாடுகளில் இருந்து இந்த விமானங்கள் இயக்கப்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom