Type Here to Get Search Results !

சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி, இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தையில் கிடைக்கும்

Chinese coronavirus vaccine could be ready by year-end, government ...

சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி, இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தையில் கிடைக்கக்கூடும் என்று சீன அரசுக்கு சொந்தமான சொத்து மேற்பார்வை மற்றும் நிர்வாக ஆணையம் (SASAC) அந்நாட்டு சமூக ஊடகமான வீசாட்டில் தெரிவித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் முதலில் கொரோனா வைரஸ் வெளிப்பட்டது. இந்த வைரஸை மூடி மறைக்க சீனா முயற்சித்ததே உலகம் தற்போது சந்தித்திருக்கும் பேரழிவுக்கு காரணம் என ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் குற்றம்சாட்டுகின்றன. சீனாவில் கொரோனா பரவல் தொடர்ந்தாலும், பெருமளவு உயிரிழப்புகளையும் பரவலை கட்டுப்படுத்தியுள்ளது. தற்போது வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
சீனாவில் தற்போது ஐந்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மனித சோதனைகளில் உள்ளன. இவற்றில் வுஹான் உயிரியல் தயாரிப்புகள் மற்றும் பீஜிங் உயிரியல் தயாரிப்புகள் ஆகிய இரு நிறுவனங்கள் தடுப்பூசி உருவாக்கத்தில் இரண்டாம் கட்ட மருத்துவ சோதனைகளில் நுழைந்துள்ளன. இவ்விரு குழுக்களும் அரசுக்கு சொந்தமான மருந்து நிறுவனமான சினோபார்முடன் இணைக்கப்பட்டுள்ளன, அதன் நிர்வாகத்தை எஸ்.ஏ.எஸ்.ஏ.சி., மேற்பார்வையிடுகிறது.

இவ்விரு நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிகள் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. பெய்ஜிங் உயிரியல் தயாரிப்புகள் நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி திறன் 100 மில்லியன் முதல் 120 மில்லியன் அளவுகள் இருக்கும். இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2021 தொடக்கத்தில் தடுப்பூசி தயாராகிவிடும் என சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom