Type Here to Get Search Results !

பொது இடங்களில் எச்சில் துப்புவோர், புகை பிடிப்போருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

Spitting, Smoking in Public Now Punishable Offences in Maharashtra

பொது இடங்களில் எச்சில் துப்புவோர், புகை பிடிப்போருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்ட திருத்தத்தை கொண்டு வர மஹா., மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பரவலை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் எச்சில் துப்புவோர், மற்றும் புகை பிடிப்போருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கவும் மீண்டும் அதே தவறை செய்தால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தங்களை தொற்று நோய்ச் சட்டத்தில் சேர்க்க உள்ளது.

இது குறித்து மாநில நலவாழ்வுத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோவில், பொது இடங்களில் எச்சில் துப்பினால் முதன் முறை ஆயிரம் ரூபாயும், இரண்டாம் முறை 3 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் முறை 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom