Type Here to Get Search Results !

திமுக கூட்டம் 65 லட்சம் ஊழல் - கிருமிநாசினி வங்குவதில் கும்பகோணம் திமுக ஒன்றிய சேர்மன்


ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் 118 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கிருமிநாசினி தொடர்பான பொருள்கள் வாங்கியதாக மட்டும் தனித்தனியாக 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக கிருமிநாசினி உள்ளிட்ட பொருள்கள் வாங்கப்பட்டதில் ரூ.65 லட்சம் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதால் விசாரணைக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க ஒன்றியப் பெருந்தலைவர் மீது அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் தஞ்சாவூர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.



கூட்டத்தில் சலசலப்பு



கும்பகோணத்தில் தி.மு.க ஒன்றியச் செயலாளராக இருப்பவர் அசோக்குமார். இவரின் மனைவி காயத்திரி கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவராக உள்ளார். இந்த நிலையில், ஊராட்சிக் குழு கூட்டம் அதன் தலைவர் காயத்திரி தலைமையில் நடந்தது. அப்போது சுமார் 100 பங்கங்களில் எழுதப்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக கிருமிநாசினி உள்ளிட்ட பொருள்கள் ரூ.90 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டதாக வாசிக்கப்பட்டது.


அப்போதே அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலரான சசிகலா என்பவர், ரூ.90 லட்சத்தில் கிருமிநாசினி வாங்கியிருப்பதில் முறைகேடு நடந்துள்ளது எனக் கூறினார் இதையடுத்து, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், இதுதொடர்பாக அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் அறிவழகன் என்பவர் கலெக்டர் கோவிந்தராவிடம் புகார் அளித்துள்ளார்.



ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில்

இதுகுறித்து அறிவழகனிடம் பேசினோம். ``ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் 118 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கிருமிநாசினி தொடர்பான பொருள்கள் வாங்கியதாக மட்டும் தனித்தனியாக 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. இதில் ரூ.90 லட்சம் மதிப்பில் கிருமிநாசினி வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தன. இதற்கு எங்கள் ஒன்றியக் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


ருமாங்கோ என்கிற கம்பெனி மூலம் இதை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், அப்படி ஒரு கம்பெனியே கும்பகோணத்தில் இல்லை. சொல்லப்போனால் ருமாங்கோ என்கிற கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கம்பெனிதான் இங்கு உள்ளது. கிருமிநாசினி பவுடர் ஒரு கிலோ என்ன விலை.. மொத்தம் எத்தனை கிலோ வாங்கப்பட்டது என எந்த விவரங்களும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை.

அறிவழகன்

அதிக ஊராட்சிகளைக் கொண்ட திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1 லட்சத்து 60,000 ரூபாய்க்கு கிருமிநாசினி வாங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்களை வாங்கியது 20 லட்சத்தைக்கூடத் தாண்டவில்லை. அப்படியிருக்கையில் இங்கு மட்டும் ரூ.90 லட்சத்துக்கு வாங்கியுள்ளனர். இதில் ரூ.65 லட்சம் வரை ஊழல் நடந்துள்ளது. இதுதொடர்பாக கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளேன். அவரும் இதை ஏற்றுக்கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்" என்றார்.


இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மன்ற உறுப்பினர் ஒருவர், ``கொரோனா தடுப்புப் பணிகளில் அ.தி.மு.க அரசு ஊழல் செய்துள்ளதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். ஆனால், கும்பகோணத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த ஒன்றியப் பெருந்தலைவர் ஊழல் செய்துள்ளார். இதை அறிந்த 6 தி.மு.க கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை" என்றார்.



அ.தி.மு.க கவுன்சிலர்கள்

கிருமிநாசினி ஊழல் புகார் குறித்து, ஒன்றிய பெருந்தலைவரான காயத்திரியின் கணவர் அசோக்குமாரிடம் பேசினோம். ``கலெக்டர் உத்தரவின்பேரில் கொரோனா தடுப்புக்கான பொருள்களை ஆணையர் பூங்குழலி வாங்கினார். இதில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை" என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom