Type Here to Get Search Results !

World News | உலக செய்தி | Thursday Morning | 30-04-2020 | வியாழன் காலை | AthibAn Tv



தென்கொரிய தலைநகர் சியோலுக்கு அருகே இச்சியோன் என்ற இடத்தில் ஒரு கட்டடத்தின் கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் (ஏப்..29) புதனன்று,ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 36 க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு கிருமிநாசினியை ஊசி மூலம் செலுத்தும் டிரம்பின் யோசனையை பெரும்பாலானோர் நிராகரித்துள்ளனர். கடந்த வாரம் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக கொரோனா நோயாளிகள் உடலில் கிருமிநாசினி அல்லது புற ஊதா கதிர்களை செலுத்துவதால் ஏற்படும் நன்மை குறித்துபேசியதோடு, சுகாதார அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டுமென கூறியிருந்தார். டிரம்பின் யோசனைக்கு மருத்துவ நிபுணர்கள் உடனடியாக கண்டனம் தெரிவித்தனர். கிருமி நாசினி தயாரிப்பாளர்கள் அவற்றை செலுத்தி கொள்ள வேண்டாமென பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். டிரம்ப் அமெரிக்கர்களிடம் நம்பிக்கையை இழந்து வருவதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற சில பயங்கரவாத அமைப்புகள் சிரியா நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அந்த பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் வான் வாழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் தாக்குதலை சிரியா அரசு கடுமையாக எச்சரித்தது. பயங்கரவாதிகள் இல்லை எனவும் தங்களின் ராணுவ நிலைளை குறிவைத்து தான் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது என்றும் கூறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரேலுக்கும் சிரியாவிற்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து தங்களது படைகள் மீது தாக்கியதாக இஸ்ரேலின் போர் விமானங்களை சிரியா வான்வழி பாதுகாப்பு படை ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்தது.

வடக்கு இந்திய பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் ஆகியவற்றில், எதிர்காலத்தில் உருவாகும் புயல்களுக்கு, பெயர்களை தேர்வு செய்ய, அப்பகுதி நாடுகளைச் சேர்ந்த வானிலை ஆய்வு மையங்கள் அடங்கிய குழு அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி, 2018ல், இந்தியா, வங்கதேசம், ஈரான், மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை,தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் நாடு ஆகிய, 13 நாடுகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்நாடுகள், எதிர்காலத்தில் உருவாகும் புயல்களுக்காக, 169 பெயர்களை தேர்வு செய்துள்ளன.

தென் சீன கடல் பகுதிக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டியடிந்த சீன ராணுவம், 'கொரோனா' வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் கவனத்தை செலுத்துமாறு, அமெரிக்காவுக்கு அறிவுரை வழங்கியுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom