Type Here to Get Search Results !

அமெரிக்க கப்பலை விரட்டியடித்த சீனா

Beijing may step up drills in South China Sea amid rising tensions ...

தென் சீன கடல் பகுதிக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டியடிந்த சீன ராணுவம், 'கொரோனா' வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் கவனத்தை செலுத்துமாறு, அமெரிக்காவுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில் உள்ள பேரசல் தீவுகளுக்கு அருகே, அமெரிக்காவின் யு.எஸ்.எஸ்., பேர்ரி ரக போர்க்கப்பல் ஒன்று சென்றுள்ளது. இதையடுத்து, அந்த பகுதியை சொந்தம் கொண்டாடும் சீனா, தன் கடற்படை கப்பல்கள் மற்றும் போர் விமானம் மூலம், அமெரிக்க கப்பலை விரட்டியடித்தது.

இது குறித்து, சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:தென் சீன கடல் பகுதிக்குள், அமெரிக்க போர்க்கப்பல் நுழைந்தது, எங்களை ஆத்திரமடைய செய்துள்ளது. சீன இறையாண்மையை மீறும் வகையில், இந்த செயல் அமைந்துள்ளது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சிகளை கைவிட்டுவிட்டு, அமெரிக்கா, கொரோனா வைரசில் இருந்து, தங்களை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தட்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom