Type Here to Get Search Results !

சுயநலவாத அமெரிக்கா - மோடியை Unfollow செய்த வெள்ளை மாளிகை

President Trump requests PM Modi to release Hydroxychloroquine ...

வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியை பின்தொடர்ந்த நிலையில் தற்போது Unfollow செய்துள்ளது.

22 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ள அமெரிக்க அதிபர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கமான வெள்ளை மாளிகை, கடந்த சில நாட்களுக்கு இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவை பிரதிபலிக்கும் விதமாக பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் அலுவலகம் ஆகிய டுவிட்டர் கணக்குகளை Follow செய்திருந்தது. இதன்மூலம் வெள்ளை மாளிகை பின்தொடர்பவர்களில் அமெரிக்கர்கள் அல்லாத கணக்குகளாக இவை இடம்பெற்றன.

latest tamil news



இந்நிலையில், தற்போது மோடி, ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் கணக்குகளை Unfollow செய்துள்ளது. தற்போது வெறும் 13 கணக்குகளை மட்டுமே பின்தொடர்கிறது. அவை அனைத்தும் அமெரிக்க நிர்வாகத்திற்கும், அதிபர் டிரம்புக்கும் தொடர்புடையவை ஆகும். ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மருந்து ஏற்றுமதி செய்து அமெரிக்காவிற்கு இந்தியா உதவியபோது, Follow செய்த வெள்ளை மாளிகை, உதவி கிடைத்ததும் தற்போது Unfollow செய்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom