Type Here to Get Search Results !

இன்று ரிஷி கபூர் : அடுத்தடுத்த மரணங்களால் பாலிவுட்டில் அதிர்ச்சி

 

கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு பக்கம் இருக்க திரைப்பிரபலங்கள் மறைந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஹிந்தி நடிகர் இர்பான் கான் மறைந்த நிலையில் இன்று(ஏப்.,30) ஹிந்தியில் மூத்த நடிகர்களில் ஒருவரான ரிஷி கபூர்(67) காலமானார்.
ரிஷி கபூர் மரணத்தை அமிதாப் பச்சன் டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். ' அவர் சென்றுவிட்டார்.. ரிஷி கபூர் இறந்துவிட்டார். நான் நிலைகுலைந்துள்ளேன்.' என கூறியுள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரிஷி கபூருக்கு, கடந்த 2018-ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதற்காக நியூயார்க்கில் ஒராண்டு காலம் சிகிச்சை பெற்றார். பின்னர் உடல் நலன் தேறி செப்டம்பர் 2019-ல் இந்தியா திரும்பினார். இந்நிலையில் புதனன்று அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மறைந்த பிரபல ஹிந்தி நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகனான இவர், தந்தை நடிப்பில் வெளியான 'மேரா நாம் ஜோக்கர்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.அப்படத்திற்காக குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதையும் பெற்றார்.

அதன்பின் பாபி என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். முதல்படமே பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட்டாக அமைந்தது. 1973 முதல் 2000 வரை அமர் அக்பர் அந்தோனி, லைலா மஜ்னு, போல் ராதா போல் போன்ற எண்ணற்ற வெற்றி படங்களை தந்து பாலிவுட்டில் வலம் வந்தார். இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அவருடன் பல்வேறு படங்களில் ஜோடியாக நடித்த நீத்து சிங்கை திருமணம் செய்து கொண்டார். இவரது மகன் ரன்பீர் கபூர், இப்போது பாலிவுட்டில் முன்னணி இளம் நாயகனாக வலம் வருகிறார். இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் பாலிவுட்டில் கடந்த ஆண்டு வெளியான 'தி பாடி' படத்தில் நடித்தது தான் ரிஷி கபூரின் கடைசி படம் ஆகும்.

இவரின் மறைவு பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom