Type Here to Get Search Results !

இயங்க தயாராக இருக்கும் அரசு பஸ்கள்! பராமரிப்பு பணிகள் துரிதம்

latest tamil news

இயக்க அனுமதிக்கப்பட்டால், உடனடியாக பஸ்களை இயக்க, அரசு போக்குவரத்து கழகம் தயாராக உள்ளது.தமிழகத்தில், அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில், 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஊரடங்கால், ஒரு மாதத்துக்கும் மேலாக பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி நிர்வாகம் மூலம், அரசு பஸ்களுக்கு அவ்வப்போது கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: வரும் மே 3ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், பஸ்கள் பகுதியளவோ, முழுமையாகவோ இயக்க அனுமதி அளிக்கப்பட்டால், உடனடியாக இயக்க தயாராக உள்ளோம். ஒவ்வொரு பஸ்சும், தொழில்நுட்பப் பணியாளர்களால் உரிய முறையில் பராமரிக்கப்படுகிறது. நீண்ட நாட்கள் பஸ்கள் ஓடாமல் இருந்தால், பழுது ஏற்பட வாய்ப்பு அதிகம். பஸ்களை டெப்போ வளாகத்துக்குள்ளேயே இயக்கி, டயர்கள், பேட்டரி போன்றவை பராமரிக்கப்படுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

பஸ் ஸ்டாண்டில் சமூக இடைவெளி

'பஸ்கள் இயக்கப்பட்டால், மாநிலம் முழுவதும் உள்ள பஸ் ஸ்டாண்ட்களில், சமூக இடைவெளியை தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும். நுழைவாயிலில் துவங்கி, ஒன்று முதல் இரண்டு மீட்டர் இடைவெளி விட்டு, இதற்கென வட்டங்கள் வரைய வேண்டியிருக்கும்.

பஸ்கள் இயக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, இப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இருப்பினும், சமூக இடைவெளியை கடைபிடிக்க செய்வதில், போலீசார் மற்றும் தன்னார்வலர்களின் பங்கு அவசியமானதாக இருக்கும். கிராமங்களில் உள்ள பஸ் ஸ்டாப்களில், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டியிருக்கும்' என அதிகாரிகள் கூறுகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom