Type Here to Get Search Results !

AthibAn News | அதிபன் செய்தி | Wednesday Noon | 29-04-2020 | புதன்கிழமை மதியம் | AthibAn Tv



சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் பகுதியில் நக்ஸல்கள் நுழைந்ததாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட ரிசா்வ் படையினா், சத்தீஸ்கர் ஆயுதப் படையினர், சிறப்பு அதிரடிப் படையினா் இணைந்து நக்ஸல்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர், இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும், சத்தீஸ்கர் ஆயுதப் படையைச் சேர்ந்த ஒரு வீரரும், மாவட்ட ரிசா்வ் படை வீரர் ஒருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சென்னை உள்பட சில முக்கிய நகரங்களில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்குதல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளிலும் நோய்த்தொற்று பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் உள்ளது என நாசா ஆய்வு செய்து உள்ளது, ஒளிக்கதிர்கள் இருண்ட பள்ளங்களில் வெற்று பாறைகளைத் தாக்கினால், ஒளி மீண்டும் செயற்கைக்கோளுக்கு பிரதிபலிக்கும், ஆனால் நீர் உறிஞ்சப்பட்டால், இந்த சந்திர குகைகளில் நீர் பனி இருப்பதை இது உறுதிப்படுத்தும்.

"கண்ணுக்கு தெரியாத எதிரி" உலகளாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டிரம்ப் சீனாவை பகிரங்கமாக குற்றம் சாட்டி, அதற்கு எதிராக விசாரணையைத் தொடங்கினார். 

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31,332 ஆக அதிகரித்துள்ளது. 1,007 பேர் பலியாகி உள்ளனர். 22,629 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7,696 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.  இதை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள சிறையில் 19 கைதிகள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் போராடி வருவதால், அதற்கு உதவிடும் விதமாக மருந்து உற்பத்தித் துறையில் இந்தியாவின் பங்களிப்பு தொடரும் என்று பிரதமா் மோடி தெரிவித்து உள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom