Type Here to Get Search Results !

கொரோனோ வைரஸ் நோய் உலகளாவிய பொது சுகாதார, அவசர நிலை - தமிழக முதலமைச்சர் அவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நீலகிரி மாவட்டம்
கொரோனோ வைரஸ் நோய் உலகளாவிய பொது சுகாதார, அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து இன்று நடைபெற்ற காணொலி காட்சி மற்றும் அலுவலக ஆய்வுக் கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் கீழ்க்கண்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது.
 நீலகிரி மாவட்டத்தில்உள்ள பூங்காக்கள், படகு இல்லங்கள் மற்றும் அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று முதல் 31.03.2020 வரையில் மூடப்படும்.
 உதகை மலை இரயில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 31.03.2020 வரை நிறுத்தி வைக்கப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
 மாவட்டத்தில் கிருமி நாசினி கிடைக்காத பட்சத்தில் கிருமி நாசினிக்குப் பதிலாக சர்ஜிக்கல் ஸ்ரிட்-ஐ கிருமி நாசினியாக நேரிடையாக பயன்படுத்தலாம். அல்லது 20 முதல் 30 விநாடிகள் சோப்பை பயன்படுத்தி கைகளை சுத்தமாக கழுவினால் போதும்.
 தனியார் உணவகங்கள் மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்வதற்கு கிருமி நாசினி தயாரிக்கும் முறைகள் 320 கிராம் பிளீச்சிங் பவுடரை 1 லிட்டர் தண்ணீரில் நன்றாக கரைத்து 20 முதல் 30 நிமிடங்கள் தனியாக வைக்கும் பொழுது கசடுகள் படிந்தவுடன், மேலுள்ள சுத்தமான கரைசலை 9 லிட்டர் தண்ணீரில் கலந்து கிருமி நாசினியாக பயன்படுத்தலாம். இந்த கலவையானது 24 மணி நேரத்தில் பயன்படுத்த வேண்டும்.
 நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்களது கடையினைச் சுற்றி, கிருமி நாசினியைக் கொண்டு, நாளொன்றுக்கு ஐந்து முறை சுத்தம் செய்யப்பட வேண்டும். கடையின் முன்பாக கைகளை கழுவுவதற்கு சோப்புத் தண்ணீர் வைக்கப்பட வேண்டும்.
 மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களை கிருமி நாசினி கொண்டு ஒவ்வொரு முறையும் உணவு பரிமாறும் முன் மற்றும் பின் சுத்தம் செய்தல் அவசியம். மேலும் உணவக சுற்றுப்புறங்களிலும் பிளீச்சிங் பவுடரைக் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
 பேருந்து நிலையம் பேருந்து நிறுத்தங்களில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் துறைகள் மூலம் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கிருமி நாசினி கொண்டு தொடர்ந்து சுத்தம் செய்யப்படும்.
 ஆம்னி பேருந்து, மினி பேருந்துகள், மேக்ஸி கேப் மற்றும் சுற்றுலா சீருந்துகள் நாள்தோறும் கிருமி நாசினி கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்
 நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் 31.03.2020 வரையில் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் எவரும் சுற்றுலாவுக்காக வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. 15.03.2020 மற்றும் 16.03.2020 ஆகிய தினங்களில் வழங்கப்பட்ட பத்திரிக்கைச் செய்தியின் படி நீலகிரி மாவட்டத்தில்உ ள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் 31.03.2020 வரை செயல்படாது.
 மாவட்டத்திலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் 31.03.2020 வரையில் மூடப்பட்டிருக்கும்.
 கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 மக்கள் அதிகம் கூடும் இடங்கள், குறிப்பாக வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள், திருமணம் மற்றும் இதர சமூக விழாக்கள், விருந்துகள் ஆகியவற்றை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விடுமுறை நாட்களின் பொழுது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டிற்குள் நுழைந்தவுடன் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.
 எனவே, நீலகிரி மாவட்ட மக்கள் மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி கொரோனா வைரஸ் நோயிலிருந்து முழுவதுமாக மாவட்டத்தினை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமெனவும்,சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக அருகாமையிலுள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எனவே, நீலகிரி மாவட்ட மக்கள் மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி கொரோனா வைரஸ் நோயிலிருந்து முழுவதுமாக மாவட்டத்தினை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமெனவும், சளி, இருமல், காய்ச்சல், மூச்சுதிணறல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக அருகாமையிலுள்ள அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் பொதுமக்கள் கொரோனா வைரஸ் சம்பந்தமாக தெரிந்து கொள்ள சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டு எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் 24 மணி நேரமும் செயல்படும் 1077 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
0423-2449250, 94432 - 08293, 79047 - 78300

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom