வருமான வரி சோதனை யாருக்கு - சீமான் ஆவேசம் || vijay house under income tax raid

நடிகர் விஜயைவிட ஒரு நடிகர் அதிக சம்பளம் வாங்குகிறார் என்று நடிகர் ரஜினிகாந்தை சீமான் மறைமுகமாக விமர்சித்துள்ளார். 
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 5 மற்றும் 8 ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன்.
தைப்பூசத் திருவிழாவிற்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன் என்றார். மேலும், விஜய்க்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது. அவரை அச்சப்படுத்தவே இந்த வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது.
நடிகர் விஜயைவிட அதிக சம்பளம் வாங்கும் நடிகர் உண்டு. ஒரு படத்துக்கு ஜி.எஸ்.டியுடன் சேர்த்து ரூ.126 கோடி சம்பளமாக ஒரு நடிகர் வாங்குகிறார். அவரின் வீட்டில் ஏன் வருமான வரி சோதனை நடத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

Post a comment

0 Comments