இந்துக்களை அழிக்கும் திமுக || அமைச்சர் அதிரடி || தெறிக்கவிட்ட ராஜேந்திர பாலாஜி

பெரியார் விவாகரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துகள் நியாயமானதுதான் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுகவிற்கு இந்துக்களின் ஓட்டு மட்டும் இனிக்கிறது. உயிர்கள் கசக்குது என்று கடுமையாக விமர்சித்தார். சென்னை வந்துள்ள சிக்கிம் கால்நடை பராமரிப்பு மற்றும் வேளாண் அமைச்சர் லோக் நாத் சர்மா, தமிழக பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜியை சென்னயில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில் சிக்கிமில் பால் பதப்படுத்தும் பண்ணை அமைப்பது நானும் சிக்கிம் அமைச்சரும் ஆலோசனை நடத்தினோம். சிக்கிம் மாநிலத்தில் பல மொழி பேசக்கூடிய மக்கள் இருக்கின்றனர். மேலும் இயற்கை உணவு மீது அந்த மக்கள் மிகவும் பிரியம் கொண்டுள்ளனர். அந்த மாநில அமைச்சர் இங்கு வந்ததற்கு தமிழக அரசு சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஸ்டாலின் முதல்வர் ஆவதை எந்தக் கொம்பனும் தடுக்க வேண்டியதில்லை. திமுகவினரே தடுத்து விடுவாங்க. கொலையாளியே ஒப்புக்கொண்ட பிறகும்கூட சிறுபான்மையினர் யாரேனும் தப்பு செய்தால் அவர் குற்றவாளி இல்லை என்று திமுகவினர் சொல்வார்கள். திருச்சி கொலை குறித்து திமுக வாய் திறக்கவில்லை. சிவகாசியில் 8 வயது சிறுமி கொடூர முறையில் கொலை செய்யப்பட்டார்.

அச்சிறுமி இந்து என்ற காரணத்திற்காக ஸ்டாலின் வாய்திறக்கவில்லை. இதேபோல் எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் குற்றவாளி சிறுபான்மையினர் என்பதால் திமுக எதுவும் பேசவில்லை. திமுக விற்கு இந்துக்களின் ஓட்டு மட்டும் இனிக்கிறது. உயிர்கள் கசக்குது. இந்துக்கள் இதற்கு பாடம் கற்பிக்க தயாராகிவிட்டனர். பெரியார் விவகாரத்தில் ரஜினிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமோ, அமைச்சர் ஜெயக்குமாரோ கண்டனம் தெரிவிக்கவில்லை. பெரியார் விவாகரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துகள் நியாயமானதுதான் என்றார். பிரேமலதா விஜயகாந்த் பேச்சு குறித்து பதில் அளித்த அவர், அதிமுக ஆலமரம் போன்றது. அதில் பறவைகள் போல் பலர் வருவார்கள், போவர்கள், கட்சியினரை திருப்திப்படுத்தவே பிரேமலதா விஜயகாந்த் அப்படி பேசியிருப்பார். கூட்டணியில் உள்ள கட்சியினரை அதிமுக அரவணைத்தே செல்கிறது" என்றார்.


Post a comment

0 Comments