Type Here to Get Search Results !

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது

புரட்டாசி மாதம் பெருமாள் மாதம் என்று சொல்வார்கள். புரட்டாசி மாதத்தில் 30 நாட்களும் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் செல்வ செழிப்பு உள்பட அனைத்து பலன்களும் ஒருங்கே கிடைக்கும் என்பது ஐதீகம்.

குறிப்பாக சனிக்கிழமை விரதம் இருந்து வழிபட்டால் ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன்கள் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில் புதன் வீடாகிய கன்னி ராசியில் சூரிய பகவான் அமர்கிறார். புதன் கிரகமானது பெருமாளை குறிக்கும். இந்த கால கட்டத்தில் உடல் வெப்பநிலை பொதுவாக அதிகரிக்கும். அதை சமப்படுத்தவே நமது முன்னோர்கள் துளசி தீர்த்தத்தை பயன்படுத்தினார்கள்.

அசைவத்தையும் தவிர்த்தார்கள். அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றிணைந்து பயன் தரும். புரட்டாசியில் பெருமாள் ஆலயங்களுக்கு செல்வது நமது மனதையும், உடலையும் மேம்படுத்தும். இதை கருத்தில் கொண்டு உங்களுக்கு மாலைமலர் தினமும் ஒரு திவ்யதேசத்தை அறிமுகம் செய்கிறது.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டமாகவும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவான ஸ்ரீரங்கத்தில் அமை யப்பெற்றுள்ள ஏழு சுற்று மதில்களுக்குள் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு சிறிய தீவு நகரமாக திகழ்கிறது ரெங்கநாதர் கோவில்.

இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது. ஸ்ரீரங்கம் கோவில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதா கும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான்.

ராமர் இந்த விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷ ணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந் தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்து விட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தும் முடியாததால் கலங்கினான்.

அங்கு ஆண்டுவந்த தர்ம வர்ம சோழன் ஆறுதல் கூறி னான். அரங்கநாதரும் காவி ரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் “தென்திசை இலங்கை நோக்கி” பள்ளி கொண்ட ருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோவில் எழுப்பி வழிபாடு செய்தான்.

தர்மவர்ம சோழன் கட் டிய ஸ்ரீரங்கம் கோவில் காவிரியின் வெள்ளப்பெருக் கினால் மண்ணில் புதை யுண்டு மறைந்தது. பின்னர் கிளிச்சோழன் ஒரு கிளி யின் உதவியுடன் மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டு பிடித்தான். “வைகுந்தத்திலுள்ள விஷ் ணுவின் கோவில் இருந்த இடம் இதுதான். அக்கோ விலை இப்போதும் இங்கு காணலாம் என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்ப கனவில் சொல்லிக் கொண்டிருந்தது. அதன்படி விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோவில் எழுப்பினான். இக் கோவிலில் ஒவ்வொரு மாதமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

வரலாறு 

சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்ககால இலக்கியங்களில் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், 9 மற்றும் 10-ஆம் நூற்றாண்டுகளில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளே கோயிலில் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, ஹொய்சள மற்றும் விஜயநகர பேரரசுகளின் காலத்தை சேர்ந்தவையாகும். அதுமட்டுமல்லாமல் அரசுகள் மாறினாலும், ஒவ்வொருவரும் கோயிலைப் தொடர்ந்து புதுப்பித்து வந்துள்ளனர்.

புரட்டாசி சனிக்கிழமை மூலஸ்தான சேவை

குறிப்பாக பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி சனிக்கிழமைகளில் இக்கோ விலில் தரிசனம் செய்வது திவ்யதேச பெருமாளை வழிபட்டதற்கு சமம். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் நம்பெருமாள் (ரெங்கநாதர்), தாயார் மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் மூலஸ்தான சேவை நேர விவரங்கள் தெரிவிக்கப்பட் டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

புரட்டாசி சனிக்கிழமைகள் ஆன வருகிற 21, 28-ந்தேதி மற்றும் அக்டோபர் 5, 12-ந்தேதிகளில் பெரிய சன் னதி மூலஸ்தான சேவையையொட்டி, அதிகாலை 5.30 மணிக்கு பொங்கல் பூஜை, காலை 6.30 மணி முதல் மாலை 5 மணி வரை சேவை நேரம், மாலை 5 மணி முதல் 6.45 மணிவரை பூஜை காலம் என்பதால் சேவை இல்லை. மாலை 6.45 மணி முதல் இரவு 8.45 மணிவரை சேவை நேரம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் விஸ்வரூப சேவை கிடையாது.

புரட்டாசி திங்கட்கிழமை இன்று 21-ந்தேதி  ஜனவரி 6-ந் தேதி  தாயார் சன்னதி மூலஸ்தான சேவையையட்டி காலை 5.30 மணிக்கு பொங்கல் பூஜை நடக்கிறது. காலை 6 மணி முதல் மாலை 5.30 மணிவரை சேவை நேரம் ஆகும். மாலை 5.45 மணி முதல் மாலை 6.45 மணி வரை பூஜை காலம் என்பதால் சேவை இல்லை. இரவு 7 மணி முதல் 9 மணி வரை சேவை நேரமாகும். இரவு 9 மணிக்கு மேல் சேவை கிடையாது.

சக்கரத்தாழ்வார் சன்னதி மூலஸ்தான சேவை நேரம் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணிவரையிலும், 12.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை பூஜை காலம் என்பதால் சேவை இல்லை. பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சேவை நேரம் ஆகும். மாலை 5.45 மணி முதல் 6.45 மணிவரை சேவை இல்லை. இரவு 7 மணி முதல் 9 மணிவரை சேவை நேரம் ஆகும். இரவு 9 மணிக்கு மேல் சேவை கிடையாது. விஸ்வ ரூப சேவை கிடையாது. சேவை நேரங்களில் 30 நிமிடம் முன்னதாகவே கதவுகள் சாத்தப்படும்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழை திருநாள் 9 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் தொடங்கியுள்ளது.

இதில் நம்பெருமாள் அலங்காரம் வகையறா அனைத்து சன்னதிகளிலும் மூலவர், உற்சவர் உள்பட சிறிய, பெரிய மூர்த்திகள் அனைவருக்கும் நூலிலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். எனவே இதற்கு நூலிலைத் திருவிழா என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவ்விழாவே ஸ்ரீரங்கத்தில் திருப்பவித்ர உற்சவம் என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.

பவித்ர உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்க, உபாங்க சேவை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

பவித்ர உற்சவத்தின் 7-ம் நாளான வருகிற 6-ந்தேதி உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் கோவில் கொட்டாரத்தில் நெல் அளவை கண்டருளுகிறார். உற்சவத் தின் 9-ம் நாளான 6-ந் தேதி காலை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பு நடைபெறுகிறது.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom