மரக்கன்றுகளின் நாயகன் சமூக ஆர்வலர் இராமநாதபுரம் சாகுல்ஹமிது

இவரோட பெயர் சாகுல்ஹமிது சமூக ஆர்வலரும்கூட. இராமநாதபுரம் ஓம்சக்திநகரில் ஆட்டோ ஓட்டிகொண்டிருகிறார். இவர் எங்க ஊர்ல ஏகப்பட்ட பொதுசேவைகளை செஞ்சுட்டு இருக்காரு.

சாலையோரம் வசிக்கும் மனநலம் பாதிக்கபட்டவர்கள், ஆதரவற்ற முதியோர்களுக்கு  ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் 25பேர்க்கு சாப்பிட உணவு கொடுத்துட்டு இருக்காரு.

தனது ஆட்டோல பயணம் செய்பவர்களுக்கு 4வருசமா  குடிக்க தண்ணிர் வசதி செஞ்சு கொடுத்திககருக்காரு.  இவரது ஆட்டோவில் வருபவர்கள் மட்டுமல்ல யாருவேணாலும் தாகத்திற்கு தண்ணீர் குடிக்கலாம். வாட்டர் கேணில்  பிடித்துகொண்டும் செல்லாம்.

அதுமட்டுமல்ல
ரொம்பநாட்களா மாலை பள்ளிக்கூடம் முடியும் நேரத்தில் பள்ளிகூடவாசலிலும்
சாலையோரமும் தனது ஆட்டோவை நிறுத்தி அந்த வழியாக வருபவர்களுக்கெல்லாம் இலவசமாக மரக்கன்று கொடுத்துகொண்டிருக்கிறார்.

எங்கள் ஊரில் உள்ள அரசுபள்ளி அரசுகல்லூரிகளுக்கும்  சென்று மரக்கன்றுகளை இலவசமாக கொடுத்து அவரே நடவுசெய்து கொடுத்து இப்படி ஏகப்பட்ட நல்லவிசயங்கள் செய்துகொண்டுவருகிறார்.

 தனது நண்பர்களின் உதவியோடு நிறையா கிராமங்களுக்கு சென்று கம்மாகரையோரம் ஊரணிகரையோரம் அதிக அளவில் மரக்கன்றுகளை நடவுசெய்துகொண்டிருக்கிறார்
எனக்கு தெரிந்து 15,000மரக்கன்றுகளை எங்கள் ஊரில் வைத்திருக்கிறார்.


தனது ஆட்டோவில் பயணம்செய்யும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அவர்கள் இறங்கும்போது ஏதாவது ஒரு மரக்கன்றை இலவசமா கொடுக்கிறார்.


நானும் இவரது செயல்பாடுகளை ரொம்பநாளா பார்க்கிறேன்.
அவரபத்தின தகவல்சேகரிக்க
சமிபத்துல அவரோட ஆட்டோல பயணம் செஞ்சேன். அவரோட பயணம்செஞ்சதுல அவர்பன்ற நல்லவிசயங்கள் பத்தி நிறைய தெரிஞ்சுடேன். அவர்கிட்டயும் நிறையா விசயங்கள் கத்துகிட்டேன்.
அன்று முழுவதும்  அவரோடுதான் பயணித்தேன். போகும்போது எனக்கும் 10 மரக்கன்றுகள் கொடுத்து விடைபெற்றார்.
என்வாழ்க்கைலயே இந்தமாதிரி ஒரு ஆட்டோடிரைவர பார்த்ததேயில்லை.
இவரைபற்றின தகவல்களை அவரது நெருங்கியநண்பர்களிடமிருந்து சிரமபட்டு வாங்கினேன்
எவ்வளவு சேவைனு நானே ஆச்சர்யபட்டுடேன்.இவரின்செயல்பாடுகள்
உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது.

உன்மையிலேயே  இந்த மாதிரி செய்திகள் தான் வைரல் ஆகவேண்டும்.

நன்றி
இராமநாதபுரத்திலிருந்து
முனீஸ்.