குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.
இதுதொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், ‘அரசிதழ் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சட்டம் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பு வரை இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.