Type Here to Get Search Results !

ஐயன் மாமுனி திருவள்ளுவரின் மறைக்கப்பட்ட சுவாரசியமான வரலாறு.

திருக்குறள் தெரியாதவன் எல்லாம் நம் திருவள்ளுவ நாயனாரைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டனர்...

திருவள்ளுவரின் மருமகன் ஏலேல சிங்கனின் வாரிசுகள் கூறுவது என்ன ?.

திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்தவர். அவரது மனைவி வாசுகி.

இது எல்லாம் நம் அனைவருக்கும் தெரிந்த வரலாறு.

இந்த வரலாறுகளும் திருக்குறள் ஓலைச்சுவடிகளும் முதல் முதலில் யாரிடம் இருந்து கிடைத்தன ?

தமிழ்ச் சங்க நூல்களில் திருக்குறள் என்ற பெயர் மட்டும் தொகை என்ற சங்க நூல் பட்டியலில் பெயர் குறிப்பு மட்டும் இருந்தது. ஆனால் முழு ஓலைச் சுவடியும் எங்கும் கிடைக்கவில்லை.

அன்றைய பிரிக்கப் படாத கோயமுத்தூர் மாவட்டத்தில் ஈரோடு அருகே முடவாண்டி  சத்தியமங்கலம் என்ற ஊரில் கள்ள கவுண்டன் பாளையம் என்ற ஊரில் திருவள்ளுவரின் மருமகனும் ஒரே வாரிசுமான ஏலேல சிங்கனின் வாரிசுகள் அரசர்களிடம் பட்டயங்கள் பெற்று மடாதிபதிகளாக உள்ளதாக தமிழ் அறிஞர்களுக்குத் தகவல் கிடைத்தது. இவர்களுக்கு கொங்கு வள்ளுவர், கொங்கு பறையர் உட்பட அப்பகுதியில் வாழும் பல்வேறு ஜாதியினர் குல சீடர்களாக உள்ளதாக தமிழ் அறிஞர்கள் அங்கு சென்ற போது அறிந்து கொண்டனர்.


மேலும் இந்த மடம் கரூர் பரமத்தி அருகே நடந்தை,அந்தியூர் ,குள்ளவீரம் பாளையம்,பாலக்காடு எல்லை ஆகிய இடங்களில் தங்களைப் போலவே உறவு முறை மடங்களை கொண்டிருந்ததாகவும் அறிந்து கொண்டனர்.

குழந்தை ஆனந்தர் மடம் என்று அழைக்கப்பட்ட இந்த மடங்களில் திருவள்ளுவர் தன் கையால் பூஜை செய்து, பிறகு மருமகன் ஏலேல சிங்கனிடம் அளித்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் விக்ரஹங்கள் பூஜை செய்யப்பட்டு வந்ததாகவும் அறிந்து கொண்டனர்.

காரணம் திருவள்ளுவரின் பூர்வீக ஊர் மதுரை ஆகும்.

கொங்கு பறையர்களின் புரோகிதர்களான கொங்கு வள்ளுவர்களுக்கே குருவாக விளங்கியதால் திரு வள்ளுவர் என்ற பட்டப் பெயர்களையும் கொண்டு இருந்தனர் இம்மடாதிபதிகள்.

இவர்கள் நிமித்தம் பார்ப்பதற்காக, அதாவது ஓலைச் சுவடிக்கட்டில் நடுவில் நூலைப் போட்டுப் பார்த்தால் எந்தப் பக்கம் வருகிறதோ அந்தப் பக்கத்தில் ஒரு திருக்குறளும், ஓரத்தில் ஒரு ஜோதிடக் குறிப்பும் இருக்கும்.

அந்த ஜோதிடக் குறிப்பை பார்ப்பதற்கான ஒரு புனித நூலாக மட்டுமே திருக்குறளை இம்மடாதிபதிகள் அப்போது பார்த்து வந்தனர்.

தற்போது இந்த சுவடிகள் 3 பிரதிகளாகவும் உள்ளன.

ஆனால் இம்மூன்று சுவடியிலும் அறத்துப்பால்,பொருட்பால்,காமத்துப்பால் இவை மட்டுமே இருந்தன.
சுவடியில் இருக்கும் ஜோதிட குறிப்பு ஆன்மிக குறிப்பாக இருந்ததால் மோட்சத்துப்பாலாக இருந்தது. இதை மேசானிய ஜெசூட் தமிழ் அறிஞர்கள் இந்து மத மூட நம்பிக்கை என்று நிராகரித்து திருக்குறளில் சேர்க்காமல் இருட்டடிப்பு செய்தனர்.

இவற்றை எல்லாம் என் நண்பர் பொன் தீபங்கரிடம் கேட்ட போதுதான் எனக்கு விளக்கமாக தெரிந்தது.
அவர் என்னை இந்த நான்கு மடங்களுக்கும் கூட்டிச் சென்றது  என்னை கடும் வியப்பில் ஆழ்த்தியது.

எவ்வளவு பெரிய விஷயங்களை கூசாமல் இருட்டிப்பு செய்து உள்ளனர் என்பதை அங்கு சென்ற போதுதான் எனக்கும் தெரிந்தது.

நாயன்மார்கள் வெறும் அறுபத்து மூவர் என்று சொல்லப்படுவதே மிகப் பெரிய மோசடி.
தனி மனித நாயன்மார்கள்தான் அறுபத்து மூவர்கள். இவர்கள் மட்டும் அல்லாமல் நம் பெரிய புராணம், மேலும் ஏழு விதமான நாயன்மார்களைப் பற்றி கூறுகிறது.

எல்லா நாயன்மார்களும் பதிகங்கள் பாடியவர்கள் அல்ல.

பதிகங்கள் பாடாத அனைவரின் சரித்திரத்தையும் சேர்த்து கூறுவதுதான் சேக்கிழார் எழுதிய "பெரிய புராணம்".

பெரிய புராணத்தின் மூலம்தான் பாடல்கள் பாடாத கண்ணப்ப நாயனார் போன்றோர்களையும் பற்றி நாம் அறிந்து கொள்கிறோம்.

கண்ணப்ப நாயனார் இன்றைய ராயலசீமா பகுதியில் கடப்பா அருகே உள்ளே உடுக்கூர் என்ற ஊரில் பிறந்த மலை ஆதிவாசியான "செஞ்சு" வேடுவர் இனத்தை சேர்ந்தவர். காளஹஸ்தியில் பிற்காலத்தில் அரசாட்சி செய்தவர். இவரது தாய்மொழி வடுகு என்ற தெலுங்கின் முன்னோடி.

தொகையடியார்களிலும் கண்ணப்ப நாயனாரை போல தமிழர் அல்லாத நாயன்மார்கள் பலர் இருந்து உள்ளனர்.
இன்னமும் இருந்து வருகின்றனர்.

1. சேக்கிழார் அறுவதாவதாக குறிப்பிடுவது 'பரமனையே பாடுவார் புராணம்'.

2. அறுபத்து ஒன்றாவதாக குறிப்பிடுவது சித்தத்தை சிவன் பாலே வைத்தார் புராணம்.

3. அறுபத்து இரண்டாவதாக திருவாரூரில் பிறந்தார் புராணம்.

4. அறுபத்து மூன்றாவது முப்பொழுதும் திருமேனி தீண்டுவார் என்ற சிவாகம விதிப் படி பூஜை செய்யும் ஆதி சைவர்களை குறிப்பிடுகிறார் சேக்கிழார்.

5. அறுபத்து நான்காவதாக முழு நீறு பூசிய முனிவர் புராணம்.

6. அறுபத்து ஐந்தாவதாக அப்பாலும் அடி சார்ந்தார் புராணம்.

7. நாற்பத்து ஒன்றாவதாக பொய்யடிமை இல்லாத புலவர் என்ற மதுரை தமிழ்ச் சங்கப் புலவர்கள்.

ஆகியோரும் நாயன்மார்களே என்றுதான் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

இதில் பொய்யடிமை இல்லாத புலவர்களாகிய கபிலர், பரணர் முதலான நாற்பத்து ஒன்பது கடைச் சங்கத் தமிழ் புலவர்கள்தான் பொய்யடிமை இல்லாத புலவர்கள் என்ற நாயன்மார்கள்.

அவர்களுள் திருவள்ளுவ நாயனாரும் ஒருவர் என்பது நம் பெரிய புராண அகச்சமய மரபு.

திருவள்ளுவரும் மேற்கூறிய 49 புலவர்களைப் போல விபூதி, ருத்ராட்சம் அணிந்து பஞ்சாட்சரம் என்ற நமச்சிவாய மந்திரத்தை ஓதி மதுரை சங்கத் தலைவனான சொக்கநாதரை இரு கையை கூப்பி வணங்கியவாரே அகத்தியம்,தொல்காப்பியம் ஆகிய இலக்கண நூல்களின. வழி காட்டுதலின் படி சங்க இலக்கியங்களை பாடியதை சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார்.

சடையப்ப வள்ளல் எனும் கம்பர் காலத்தில் சோழ நாட்டில் தெலுங்கு சோழர்கள் கம்பருக்கு வஞ்சனை செய்தனர்.

வஞ்சிக்கபட்ட தமிழ் புலவர்களை சேர நாடான தற்போதைய கொங்கு மண்டலத்தில் குடியேற்றினார்
சடையப்ப வள்ளல்.
அவ்வாறு வந்த புலவர்களின் வாரிசில் ஒருவர்தான் மைலாப்பூரில் இருந்து கரூர் பரமத்தியிலுள்ள நடந்தை, முடவாண்டி சத்தியமங்கலம் ஆகிய ஊர்களில் குடியேறிய திருவள்ளுவரின் மருமகனான ஏலேல சிங்கனின் வாரிசுகள்.

திருவள்ளுவர் பொய்யடிமை இல்லாத புலவர்.
இவரது பெயரை திருவள்ளுவ நாயனார் என்றே, திருவள்ளுவர் பூஜித்த லிங்கத்தை இன்று வரை பூஜித்து வரும் திருவள்ளுவரின் பெண் வழி பேரன்களான இந்த மடாதிபதிகள் கூறி வருகின்றனர்.

என்னிடம் ஜெசூட் G.U.போப் எழுதிய திருக்குறள் புத்தகம் உள்ளது. அதில் G.U.போப் "திருவள்ளுவ நாயனார்" என்றே குறிப்பிட்டு உள்ளார் என்பதை பாருங்கள்.

இவ்வாறெல்லாம் ஆழமாக ஆய்வு செய்யாமல் திமுக ,திக என்ற சாக்கிய பௌத்த மேசானிய ஜெசூட் சிண்டிகேட் கும்பலின் தற்போதைய போலி விவாதங்களை கண்டு ஏமாறாதீர் நண்பர்களே.

திருவள்ளுவர் திருநீறு அணிந்த பொய்யடிமை இல்லாத புலவராகிய நாயனார்

மனைவி வாசுகி,மகள்,மருமகன் ஏலேல சிங்கன் என்று முறைப் படி குடும்பமாக அறம்,பொருள்,இன்பம்,வீடு என்ற தர்மம், அர்த்தம்,காமம், மோட்சம் என்ற வேதாந்த நிலைகளையும் வாழ்வங்கு வாழ்ந்தவர்.

கடவுள் வாழ்த்தில் அவர் குறிப்பிடும் கடவுள் இன்றும் அவரது வாரிசுகளால் பூஜை செய்யப்பட்டு வருகிறது.
அவர்தான் மதுரை தமிழ்ச் சங்கத் தலைவனான இறைவனார் எனும் சொக்கநாதப் பெருமான்.

மேற்கூறிய மடாதிபதி வீட்டில் 1960 ஆண்டுகளில் கீழ்கண்ட புகைப்படம் எடுக்கப்பட்டது. மரணப் படுக்கையில் இருந்த 80 வயது ஏலேல சிங்கனின் வாரிசு மடாதிபதியை அதில் காணலாம்.
1900 ஆண்டுகளில் விபூதி,ருத்ராட்சத்தோடு குடும்ப சகிதமாக 20 வயது இளம் மடாதிபதியாக இருந்த இதே சுவாமிகளைதான் அன்று திருக்குறள் ஏடுகளை படி எடுத்துச் சென்ற தமிழ் அறிஞர்கள் மாடலாக வைத்து முதன் முதலில் திருவள்ளுவர் படத்தை வரைந்தனர்

தூத்துக்குடி மாவட்டம் திருக்குளந்தை (எ) பெருங்குளம் ஶ்ரீ திருவழுதீஸ்வரர் சமேத ஶ்ரீ கோமதி அம்பாள் தேவஸ்தானத்தில் ஶ்ரீ கோமதி அம்பாள் சன்னதிக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் இருக்கும் தெய்வப்புலவர் "திருவள்ளுவர்" அவர்களின் சிலையையும் பாருங்கள்.
திருவள்ளுவரின் படிப்படியான மாற்றங்கள்.புகைப்படங்களாக.

முக நூலிலும்,வாட்ஸ் அப்பிலும் பகிர வேண்டுகிறேன். தமிழர்கள் அறிந்து கொள்ளட்டும். இறக்குமதி ஆன பாலைவனத்து  ஆப்ரஹாமிய கடவுளான ஏசு என்பவனிடமிருந்தும் அவனின்  கிறிசவ அடிமைகளான திக, திமுக, மற்றும் zombie களிடமிருந்தும் நமது ஐயன் திருவள்ளுவரை பாதுகாக்க அனைவருக்கும் பகிருங்கள்.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom